Title of the document



சென்னை தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.


            அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுமூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர். சம்பளப்பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது,ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன்,பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம்போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள்மேற்கொள்கிறார்கள். நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமனமுறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை. இந்த நிலையில், 38உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய,ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாகதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். நேரடிஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில்சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள்இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post