Title of the document

இளம் இடைநிலை ஆசிரியர்      ஊதிய முரண்பாடு இதைப்பற்றிய ஒரு தொலைநோக்குப் பார்வை.

ஊதிய குறைவு ஆசிரியரின் வாழ்வாதாரத்தை மட்டும் தான் பாதிக்கிறதா ?     அல்லது சமூகத்தையும் பாதிக்கிறதா? ஒரு விரிவான அலசல் .

12ம் வகுப்பு முடித்து 2வருடம் ஆசிரியர் பயிற்சி முடிக்க வேண்டும் . (அதற்கு ரூ.1,00,000 வரை செலவழிக்க வேண்டும்)பின் தகுதித் தேர்விற்கு தயாராக வேண்டும்.அதன் பின் கிடைக்கும் இடைநிலை ஆசிரியர்  வேலைக்கோ மிக்குறைந்த ஊதியம் என்ற நிலை வரும் போது எத்தனை பேர் ஆசிரியர் பயிற்சி படிக்க முன் வருவர்.  அப்படியே படிக்க வந்தாலும் முன்பு போல் திறமையான மீத்திறமையான மாணவர் படிக்க விரும்ப மாட்டார்கள். விளைவு திறமையான ஆசிரியர் உருவாகும் வாய்ப்பு குறையும் என்பதை அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும்  .  

ஆசிரியர்களே சற்றே சிந்தித்து பாருங்கள் 2009 ற்கு பின் பணியி்ல் இருப்பவர் அனைவரும் 24 லிருந்து 37வயதிற்கு உட்பட்டவர்கள் பெரும்பான்மையானோர் முதுகலைப்பட்டம் பெற்றவர்களே...

தொடக்கப்பள்ளி இளம் இடைநிலை ஆசிரியர்களுக்கு இதே நிலை  நீடித்தால்
திறமையான தொடக்கப்பள்ளி ஆசிரியர்களை தமிழ்நாடு இழந்துவிடும் என்பதில் ஐயமில்லை

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post